மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 28.06.2023 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில், அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி-80ஆவது மருத்துவக் கல்வி நிறைவு விழாவில் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி நிறைவுச் சான்றிதழ், சிறந்து விளங்கிய மருத்துவ மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.மூர்த்தி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் மரு.இரா.சாந்திமலர், அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பாலாஜி மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.