மொபைலில் ஏரோபிளேன் மோட் (Airplane mode) ஏன் உள்ளது?

viduthalai
1 Min Read

இன்றைக்கு மற்ற போக்குவரத்தை போல விமானப் போக்குவரத்தையும் மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு விமான நிறுவனமும் பல பாதுகாப்பு விதிகளை உள்ளடக்கியுள்ளன. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் பொதுவாக அனைத்து விமானங்களிலும் பின்பற்றப்படும் ஒரு விதி என்றால் பயணிகள் தங்களது மொபைலை ஏரோபிளேன் மோடில் போடுவது தான்.

விமானம் புறப்படும் போதும், தரையிறங்கும் போதும் பயணிகளை மொபைலை ஏரோப்ளேன் மோடில் வைக்க வலியுறுத்துவார்கள். எதற்காக அவ்வாறு அறிவுறுத்தப்படுகிறது?

விமானம் பறக்கும் போது மொபைலை Airplane modeஇல் வைக்க சொல்வது ஏன்? காரணம் இதுதான்!

விமானம் பறக்கும் போது மொபைலை ஏரோபிளேன் மோடில் வைக்கவில்லை என்றால் அது விமானத்தின் தகவல் தொடர்பு மற்றும் நேவிகேஷன் அமைப்புகளில் இடையூறு ஏற்படுத்தலாம் என்பதே இதன் அடிப்படை.

இதன் விளைவாக விமானத்தின் செயல்பாட்டில் குறுக்கீடு ஏற்பட்டு, விமானிகளுக்கு சிக்னல் கிடைப்பதில் சிக்கலை ஏற்படலாம். இதனால் அந்த விமான பயணத்தின் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

செல்போன்கள் எலக்ட்ரோமேக்னெட்டிக் (Electromagnetism) சிக்னல்களை வெளியிடுகின்றன. இதனால் விமானத்தின் தகவல் தொடர்பு அமைப்புகளில் இடையூறு ஏற்படலாம். மேலும் கட்டுப்பாட்டு அறைகளுக்கிடையான தகவல் பரிமாற்றத்தை இது பாதிக்கக்கூடும்.

இதன் காரணமாக மொபைலை ஏரோப்ளேன் மோடில் போட வலியுறுத்துகின்றனர். ஒரு பாதுகாப்பான விமானப் பயணத்தை உறுதி செய்வதற்காகவே விமானத்தின் டேக் ஆப் அல்லது லேண்டிங் போது இவ்வாறு செய்ய வலியுறுத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *