திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கொத்தகோட்டை என்ற கிராமத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுத காத்திருந்த மாணவி பேருந்தை கைகாட்டி நிறுத்தினார்.
பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, பேருந்தை விட்டுவிட்டால் தேர்வு எழுதச் செல்ல முடியாதே என்ற அச்சத்தில் பேருந்தை பிடித்துக்கொண்டே பின்னால் ஓடிச் சென்றார். சற்று தொலைவிலேயே சென்று பேருந்தை ஓட்டுநர் நிறுத்தினார். அதன்பிறகு மாணவி பேருந்தில் ஏறிச் சென்றார்.
இந்த நிலையில், தேர்வு எழுதுவதற்காகப் பள்ளி செல்ல காத்திருந்த மாணவியை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் முனிராஜ் மீது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (விழுப்புரம்) மேலாண்மை இயக்குநர் விசாரணை மேற்கொண்டார். மேலும் அவரை தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டார்
மே மாதம் எட்டாம் தேதி நடந்த இந்த நிகழ்வில் ஓடிச்சென்று பேருந்தைப் பிடித்து தேர்வெழுதிய மாணவி 436 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மொழிப்பாடம் தவிர மற்ற அனைத்திலும்
90க்கும் மேல் மதிப்பெண் பெற்ற அந்த மாணவிக்குப் பாராட்டுகள் குவிந்துவருகிறது
அந்தப்பேருந்தை தவறவிட்டிருந்தால் தேர்வு எழுதி இருக்கமுடியாது என்று அப்பெண் கூறியிருந்தார்.