சென்னை, மே 8- தமிழ்நாட்டில் ரஷ்ய கல்வி கண்காட்சி 6 நாட்கள் நடைபெற இருக்கிறது.
இதுதொடர்பாக தென் இந்தியாவுக்கான ரஷ்ய துணைத்தூதர் வாலெரி கோட்ஜெவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மருத்துவக் கல்வியை படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா முதன்மை நாடாக இருக்கிறது. கடந்த ஆண்டு 8 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருந்த மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டு 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் சேருவதற்காக ரஷ்ய கல்விக் கண்காட்சி 6 நாட்கள் நடத்தப்பட உள்ளது.
வருகிற மே 10, 11ஆம் தேதிகளில் (சனி, ஞாயிற்றுக்கிழமை) சென்னை ஆழ்வார்ப் பேட்டை கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ரஷ்ய கலாசார மய்யத்தில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 13ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவை தி கிராண்ட் ரீஜெண்ட் விடுதியிலும், 14ஆம் தேதி சேலம் ஜி.ஆர்.டி.சைப் விடுதியிலும், 15ஆம் தேதி திருச்சி பெமினா விடுதியிலும், 16ஆம் தேதி மதுரை ராயல் கோர்ட் விடுதியிலும் நடக்கிறது.
மருத்துவப்படிப்பு மட்டுமல்லாது பொறியியல், தொழில் நுட்பம் சார்ந்த இளநிலை படிப்புகளிலும் ரஷிய பல்கலைக்கழகங்களில் சேர முடியும்.
பல்கலைக்கழகங்கள்...
இந்த கல்வி கண்காட் சியில் வோல்கோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம் இம்மானுவேல் காண்ட்பால் டிக் பெடரல் பல்கலைக்கழகம், கசான் மாநில மருத்துவ பல்கலைக்கழகம், தேசிய ஆராய்ச்சி நியக்ளியர் பல்கலைக்கழகம், மாஸ்கோ விமான போக்கு வரத்து கல்வி நிறுவனம், மாஸ்கோ ஸ்டேட் பிராந்திய பல்கலைக்கழகம் பங்கேற்க உள்ளன.
மருத்துவப் படிப்பு களில் சேர விருப்பம் உள்ளவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, பிளஸ்-2 வகுப்பில் முக்கிய பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் ரஷிய பல்கலைக்கழகங்களில் சேருவதற்குசி.இ.டி., ஐ.இ.எல். டி.எஸ். போன்ற முன் தகுதித் தேர்வுகள் தேவை இல்லை. கூடுதல் விவரங்களுக்கு 9282221221 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது சென்னை ரஷிய கலாசார மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் டோடோ நவ், வோல்கோகிராட் மாநில மருத்துவ பல்கலைக் கழக சர்வதேச தொடர்பு பிரிவு தலை வர்நடாலியா அல்சுக், ‘ஸ்டடி அப்ராடு எஜூகேஷனல் கன்சல்டன்ஸ்’ நிறுவனத் தின் மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.