டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*2026 தேர்தலுக்கு தயாராகும் திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று நான்காண்டு நிறைவடைந்து, 5ஆம் ஆண்டு தொடங்குவதையொட்டி, அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடந்த விழாவில், பல துறைகளின் சார்பில் 390 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
தி இந்து:
*நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விளக்கமளிக்க வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிக் கூட்டத்தை அரசாங்கம் நடத்தும் என்று ஒன்றிய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்திலாவது பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று காங்கிரஸ் நம்பிக்கை.
எகனாமிக் டைம்ஸ்:
* அய்.எம்.எஃப். நிதி நிறுவனத்தில் இருந்து விலக்கப்பட்ட மேனாள் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் புத்தகத்தின் இரண்டு லட்சம் பிரதிகளுக்கு ரூ.7.25 கோடி செலவில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆர்டர் செய்த விவகாரத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை “வெளிப்படையாக” விளக்கம் அளிக்க காங்கிரஸ் கோரிக்கை.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 8.5.2025
Leave a Comment