அலங்காநல்லூர், மே 8- மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக, கடந்த 04/05/2025 அன்று மாலை 5 மணி அளவில், அலங்காநல்லூர், குமாரம் பகுதியின் சந்தை திடலில், புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவும், திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மதுரை புறநகர் மாவட்ட, கழக தலைவர் த.ம.எரிமலை கூட்டத் திற்கு தலைமை தாங்கினார், மதுரை புறநகர் மாவட்ட செய லாளர் பா.முத்துக்கருப்பன், கா. சிவகுருநாதன் மாநில தொழிலாளர் பேரவை தலைவர், வீரராகவன் தங்கதுரை மதுரை புறநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர், இரா.கலைச்செல்வி மாவட்ட மகளிரணி செயலாளர், திராவிட செல்வன் பகுத்தறிவாளர் கழகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிரணி தலைவர் பெ.பாக்கியலட்சுமி வர வேற்புரையாற்றினார். மாநில சட்டத்துறை துணை செயலாளர் நா.கணேசன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் தொடக்கவுரையாற்றினர்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் வா.நேரு, கழக சொற்பொழிவாளர் மு.இளமாறன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து, மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் விளக்கவுரையாற்றினார். தோழமை கட்சி பொறுப்பாளர்கள்: சிந்தனை வளவன் மதுரை மேற்கு மாவட்ட செயலாளர், தலித்ராசா மாநில கொள்கை பரப்பு செயலாளர், ஆதி தமிழர் பேரவை, திருவளவன் தென்மண்டல இளம்புலிகள் செயலாளர், தமிழ் புலிகள் கட்சி உரையைத தொடர்ந்து, கழக பேச்சாளர் தேவ.நர்மதா சிறப்பு ரையாற்றினார்.
மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள்: அ.முருகானந்தம் மாநகர் மாவட்ட தலைவர், லீ.சுரேசு மாநகர் மாவட்ட செயலாளர், தேவராஜ பாண்டியன் மாநகர் மாவட்ட மாணவர் கழக செயலாளர், போட்டோ ராதா க.பெரியசாமி மேலூர் நகர செயலா ளர், ச.அறிவுச்செல்வி மதுரை புறநகர் மாவட்ட மாணவர் கழக செயலாளர், ச. அறிவுப்பாண்டி மாணவர் கழக தலைவர், ம. ரஞ்சித்குமார் மாணவர் கழக துணை தலைவர், பெ.தமிழ்மணி ஒத்தக்கடை நகர இளைஞரணி செயலாளர் நன்றியுரையாற்றினார். ஏராளமான தோழமைக் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.