கீழப்பாவூரை சார்ந்த கழக பொதுக்குழு உறுப்பினர் பி.பொன்ராஜ் (வயது 65) நேற்று இரவு (6.5.2025) 10.15 மணியளவில் மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம்.
அவர் கடந்த 40 ஆண்டுகளாக இயக்கப் பணியாற்றியவர். கழக போராட்டங்களிலும் தவறாது கலந்து கொள்ளக்கூடியவர் சிறை யேகியவர். அனைத்து இயக்க நிகழ்வுகளிலும் குடும்பத்தோடு கலந்து கொள்ளக்கூடியவர். பல முறை குருதிக்கொடை செய்தவர். சிறந்த பொது நலத் தொண்டர்!.
மறைவுக்குப் பிறகு அவரது விழிகள் கொடையாக வழங்கப்பட்டன.
சிறந்த இயக்க வீரனின் மறைவிற்கு இரங் கலைத் தெரிவிப்பதுடன் குடும்பத்தின் தலைவரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தினருக்குக் கழகத்தின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை தலைவர்,
7.5.2025 திராவிடர் கழகம்
குறிப்பு: தமிழர்தலைவர், கழகத் துணைத் தலைவர் கவிஞர்கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் அவருடைய மகன் பிரவீன்குமாரிடம் ஆறுதல் தெரிவித்தார்கள்.
இறுதி நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்ட கழக காப்பாளர் சீ.டேவிட் செல்லதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் அய்.இராமச்சந்திரன், வே.கோபால், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன், மாவட்ட செயலாளர் தெ.சண்முகம், மாவட்ட திமுக செயலாளர் வே.செயபாலன், கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், கீழப்பாவூர் நகர திமுக செயலாளர் ஜெகன், மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் அ.சவுந்தரபாண்டியன், தொழிலதிபர் பி.ஆர்.கே.அருண், கீழப்பாவூர் தலைவர் ராமசாமி, ந.இராமச்சந்திரன், மு.சிவப்பிரகாசம், பி.சிவா, இல.அன்பழகன், இல.அறிவழகன், புதியபழனி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் கோபால், மேலமெஞ்ஞானபுரம் மருத்துவர்கள் அன்பரசன், கவுதமி மற்றும் டே.சாந்தி, கி.சேகர், சே.முருகன், அன்ன புஷ்பம், மல்லிகா, த.மணிவண்ணன், ஜெய்சிங், ம.தேன்மொழி, தே.தேன்மொழி, செல்வ மாதா, ஜான்சி, செம்மலர், ரம்யா, ஞானமணிசமுத்திரம், மாவட்ட ப.க. பொறுப்பாளர்கள் ஆறுமுகம், பாரதிராஜா ஆகியோர் பங்கேற்றார்கள். பின் உடல் எவ்வித சடங்கும் இல்லாது எரியூட்டப்பட்டது.