சென்னை, மே 7- இன்றைய தமிழ்நாடு அரசு வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மாணவர்களின் திறன் மேம்பாட்டில் முக்கியமானதொரு முன்னெடுப்பைச் செய்து வருகிறது.
வேலை வாய்ப்பு
அதன் தொடர்ச்சியாக மாணவர்களின் கல்வி, வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு முழுவதும் 100 அறிவுசார் மய்யங்களை மாவட்டம் தோறும் தொடங்கி நடத்தி வருகிறது. அதில் மாணவர்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை இலவசமாகவே வழங்குகிறது.
மாதிரி தேர்வு
ஒவ்வொரு பயிற்சி மய்யத்திலும் 200க்கும் மேற்பட்டோர் பயில்கின்றனர். இதில் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படு கின்றன.
தனியார் பயிற்சி மய்யங்களை விட சிறப்பாக உணவறை, தூய்மையான குடிநீர், இணைய வசதியுடன் கணினிகள் உள்ளிட்ட எல்லா அடிப்படை கட்ட மைப்பு வசதிகளுடனும் அறிவுசார் மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதனால் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை இந்த அறிவுசார் மய்யம் அதிகரித்துக் கொடுத்துள்ளது. இது தமிழ்நாடு அரசின் சாதனைகளுள் மகுடம் சூட்டியது போன்ற ஒன்றாகும்.