ஒன்றிய பொதுத்துறை நிறுவனத்தில் பணி வாய்ப்பு

viduthalai
2 Min Read

ஒன்றிய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஒரு முதன்மையான ஒன்றிய பொதுத்துறை நிறுவனமும் இந்தியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் நிறுவனமான பவன் ஹான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant (Materials, Stores). காலியிடம்: 1. ஊதியம்: ஆண்டுக்கு ரூ.6.12 லட்சம். தகுதி: Stores, Materials Management இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Station In-Charge (RCS). காலியிடங்கள்: 8. தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Marketing,Finance, Aviation பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஊதியம்: ஆண்டுக்கு ரூ.6.12 லட்சம். வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Helper. காலியிடங்கள்: 8. தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஊதியம்: ஆண்டுக்கு ரூ 3.22 லட்சம். வயது: 25-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்விற்கு செல்லும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.118. இதனை Pawan Hans Limited, Delhi என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.pal.ainiai என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து, அதில் கையொப்பமிட்டு, சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஒட்டி, அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: HOD (HR & Admin), Northern Region Pawan Hans . Limited, Northern Region, Rohini Heliport, Sector 36, Rohini, New Delhi – 110 085. Phone: 011-27902646.

இணைய வழியில் விண்ணப்பிப்பது மற்றும் பிரிண்ட அவுட் வந்து சேர கடைசி நாள்: 10.5.2025

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *