திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சி பட்டறை குற்றாலத்தில் 28.06.2023 அன்று துவங்கி நடை பெற்று வருகிறது.
இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு மத்தியில் உரை நிகழ்த்திய கழகத்தின் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் புதிய கல்விக் கொள்கை என்றால் என்ன ? நீட் தேர்வு என்றால் என்ன? அதை நாம் ஏன் எதிர்க்கிறோம்? என்பதை பற்றி மிக விளக்கமானதொரு ஆழமாக எளிதில் புரிந்து கொள்ளகூடிய வகையில் ஒரு பேராசிரியரை போல் மாணவர்களுக்கு பாடம் எடுத்தார்.
புதிய கல்விக் கொள்கையில் படிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ‘ஸ்கில் டெவலப்மெண்ட்’ என்ற பெயரில் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து குலக்கல்வி திட்டத்தை மீண்டும் புதிய வடிவில் கொண்டு வருகிறார்கள் என கூறினார்.
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை தொடர்ந்தால் அதானியும் , அம்பானியும் ,கார்ப்பரேட் சாமியார்களும் தான் இனிமேல் பள்ளிகளை யும் , கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் நடத்த முடியும் என்ற ஒரு நிலை உருவாகிவிடும் என்று மிகவும் வருத்தத்தோடு சொன்னார்.
புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மாநில மொழிகளை தமிழை அழிக்கத் துடிக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையில் நம்மை ஏமாற்றும் பல திட்டங்கள் நிறைய மறைந்து இருக்கிறது அவர்கள் சொல்லுகின்ற சிலவற்றைப் பார்த்து நாம் ஏமாந்து விடக்கூடாது கல்வியை கையில் எடுத்தால் தான் நாட்டில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கலாம் என்பதை தெரிந்துகொண்டு கல்வியை கையில் எடுத்திருக் கிறார்கள்.
புதிய கல்விக் கொள்கை திட்டத்தில் அருகருகே இருக் கும் சிறிய பள்ளிகளையும் கல்லூரிகளையும் எடுத்துவிட்டு அய்ந்து கிலோ மீட்டர் பத்து கிலோமீட்டர் தூரத்தில் பள்ளிக்கூடங்களையும் கல்லூரிகளையும் அமைப்பதற்கு புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கிறது இதனால் மாண வர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும் என்றார்.
மாணவர்களின் மருத்துவக் கனவை ‘நீட்’ தேர்வு பாழாக்குகிறது கிராமப்புற மாணவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் அதனால் இன்னும் இரண்டு ஆண்டு களிலோ அல்லது மூன்று ஆண்டுகளிலோ நீட் தேர்வை விலக்குவதற்கு நாம் போராட வேண்டும் என்று கூறினார்.
‘ஒன் நேசன், ஒன் ரேஷன்’ என்று சொல்லும் இவர் களால், நமது கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கேட்பது போல் ஒரே ஜாதி என்று அறிவிக்க முடியுமா? என்று உணர்ச்சி பொங்க கேட்டார். சாமியார்கள் மூலம் இந்த நாட்டை கைப்பற்ற நினைக்கிறது சனாதன கும்பலான ஆர்.எஸ்.எஸ்ம், பிஜேபியும் என்று கூறினார்.
ஆசிரியர்களுக்கு எல்லாம் தேர்வு என்ற முறையை கொண்டு வந்து அவர்களை எல்லாம் நீக்கிவிட்டு சாமியார் களை கொண்டு பாடம் எடுக்க நினைக்கிறது பிஜேபி.
இந்த நாட்டில் மாற்றத்தை உருவாக்க மாணவர்களாகிய உங்களால் தான் முடியும் அதனை எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தலில் யார் வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் நீங்கள் தான் அதனை தீர்மானிக்க வேண்டும் நீங்கள் நினைத்தால் மாற்றி அமைக்கலாம். கழகப் பொறுப்பாளர் களை தொடர்பு கொள்ளுங்கள் கழகம் அறிவிக்கும் போராட்டங்களில் கலந்து கொள்ளுங்கள் என்று உருக்க மாக கேட்டுக் கொண்டார்.
மாநில அரசு தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பினால் அதனை ஒன்றிய அரசு நிறைவேற்றுமா ? என்று ஒரு மாணவர் கேட்ட கேள்விக்கு. நாம் போட்ட தீர்மானம் இன்னும் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேரவில்லை – மீண்டும் நாம் நீதிமன்றத்திற்குப் போனால் அதிகாரம் அவர்கள் கையில் இருப்பதால் அவர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு அமைந்து விடும் – கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் – அதற்கு வரும் தேர்தலில் ஒன்றிய அரசை மாற்றி அமைக்க வேண்டும் என அந்த மாணவருக்கு பதில் அளித்தார்.
நீதி கட்சி அகற்றியதை எல்லாம் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மீண்டும் கொண்டு வருகிறது பிஜேபி ஒன்றிய அரசு என மிகவும் விளக்கமாக மாணவர் களுக்கு புரியும் வகையில் ஒரு பேராசிரியரை போல் வகுப்பு எடுத்தார்.
இறுதியில் மாணவர்களை கேள்வி கேட்கச் சொல்லி அதற்கு பதில் அளித்தார். அப்படி கேள்வி கேட்ட பல்வேறு மாணவர்களுக்கு புரியும் படியும் விளக்கமாகவும் பதில் அளித்தார்.
அவரது விளக்கமான கருத்துக்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. பொதுச் செயலாளர் கூறிய கருத்துக்களை மிகவும் கவனமாக கேட்டு மாணவர்கள் குறிப்பெடுத்துக் கொண்டார்கள் .
அவர் வகுப்பை முடித்த போது எல்லோரும் எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சி யையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்கள்.
பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களுக்கு நன்றி!
பொன்.பன்னீர்செல்வம்
காரைக்கால் மாவட்ட செயலாளர்
திராவிடர் கழகம்