ஈரோடு, மே 7– ஈரோடு பெரியார் படிப்பக வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை 04.05.2025 ஈரோடு பழையபாளையம் ரோட்டேரி குளிர்சாதன அரங்கில் நடைபெற்றது.
அனிச்சம் கனிமொழி (தலைவர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்) தலைமை தாங்கினார்.
கவிதா நந்தகோபால் (செயலாளர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்) அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அ.அருள்மொழி
கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி “வெளிச்சம் பாய்ச்சிய வேர்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவரது உரையில் “தந்தை பெரியார், நாகம்மையார், மணியம்மையார், மூவலூர் இராமாமிர் தம்மாள்,குஞ்சிதம் அம்மையார், சிவகாமி சிதம்பரம். முத்துலட்சுமி (ரெட்டியார்) மற்றும் ஏராளமான சுயமரியாதை இயக்கப் பெண்கள் சமூக மாற்றத்திற்கான பணிகளை முன்னெடுத்ததை விளக்கியும், தற்போதைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பெண்கள் முன்னேற்றத்திற்காக தீட்டி வரும் திட்டங்கள் பற்றியும், தமிழர் தலைவர் ஆசிரியர் பற்றியும் உரையாற்றினர்கள்.
சிறப்புரைக்கு முன்னதாக மகளிரே பங்கெடுத்து நடித்த சமத்துவ நாடகம் சிறப்பாக இருந்தது. இறுதியாக வாசகர் வட்ட பொருளாளர் ஆனந்தலட்சுமி நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.
கூட்டத்தில் ஈரோடு மேயர் நாகரத்தினம், மாவட்ட தி.மு.க. பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, திமுகமாநில சட்டத் துறை இணை செயலாளர் மா.சு.ராதாகிருஷ்ணன், மாநில திமுக மாணவரணி துணைச் செயலாளர் வீரமணி ஜெயக்குமார்,பகுதிக் கழக செயலாளர்கள் வி.சி.நடராஜன், அக்னி சந்துரு, வில்லரசம்பட்டி முருகேசன், கவுன்சிலர்கள் செல்லப் பொன்னி, ஜெகதீசன், குமாரசாமி,வழக்குரைஞர் திருமலை, தி.மு.க பேச்சாளர் இளைய கோபால், அன்பரசு, அன்பெழில், பி.என்.எம். பெரியசாமி, மாலதி, மதிவாணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு த.சண்முகம், மாவட்ட கழக தலைவர் இரா.நற்குணன், கோபி மாவட்ட கழக காப்பாளர் ந.சிவலிங்கம், மதிவதனி, ராஜேஸ்வரி, திமுக மாவட்ட துணைச்செயலாளர் து.நல்லசிவம், பூங்கொடி, தன்மதி, கோபி வெ.குமணன், கமலக்கண்ணன் (ஜப்பான்), திராவிட இயக்க தமிழர் பேரவை தமிழ்க்குமரன். நடராஜன், பள்ளிபாளையம் பொன்னுசாமி, செங்கப் பள்ளி சசிக்குமார் மற்றும் திரளான தோழர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.