சென்னை, ஜூன் 30 – சென்னையை சேர்ந்த அவதார் ஏஎச்சிடி அறக்கட்டளை, தமிழ்நாடு மற்றும் புதுச் சேரியில் உள்ள மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெண்களிடையே தொழில் புரிவதற்கும் மற்றும் பணி புரியும் நோக்கத்தை உருவாக்குவ தற்காக ப்ராஜெக்ட் புத்ரி என்னும் திட்டத்தை செயல்படுத்திவருகிறது.
முதன்முறையாக இந்த அறக்கட்டளையின் திட்டத்தின் வாயிலாக கமலிசிறீ என்னும் பெண் டவ் இந்தியா நிறுவனத்தின் முழுநேர ஊழியராக பணியில் இணைந்து உள்ளார்.
இதுகுறித்து இக் குழுமத்தின் நிறுவனர் டாக் டர் சவுந்தர்யா ராஜேஷ் கூறுகையில், “உலக பாலின குறியீட்டில் நம் நாடு எட்டு இடங்கள் முன்னேறியுள்ள நிலை யில், நமது நாட்டின் பிர காசமான மற்றும் சமமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் டவ் இந் தியா போன்ற கூட்டு நிறு வனங்கள் எங்களிடம் உள்ளனர்.
இத்தகைய நிறுவனங் களின் துணையுடன் கமலிசிறீ போன்று பல பெண்களின் வாழ்க் கையை மாற்றியமைப்பது மட்டுமல்லாமல், நாட்டின் சிறந்த பொருளாதார எதிர்காலத்திற்கு பங்களிக்கும் பெண்களின் தொழிலாளர் பங் கேற்பை அதிகரிப்பதற்கான வேகத்தை உருவாக் குகிறோம்” என்று கூறினார்