தந்தை பெரியார் கொள்கை வழியில் , பயணித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யாவின் அன்புக்கும் பாசத்திற்கும் உரியவருமான பகுத்தறிவுப் புலவர் ‘பாவலர்மணி’ ஆ.பழநி எழுதிய 18 அரிய நூல்களை நாட்டுடைமையாக அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த “பாவேந்தர் பிறந்தநாள் – தமிழ் வார விழா’’வில் பரிவுத் தொகை ரூ 10,00,000/-த்தினை(பத்து இலட்சம்) புலவரின் மரபுரிமை பேரன் அழகு பாண்டியனிடம் வழங்கினார்கள். உடன்: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அனிச்சம் அறக்கட்டளை தலைவர் சாமி.திராவிடமணி, புலவரின் பேரன்கள் நாராயணன், இராமநாதன் காசிநாதன் ஆகியோர் உள்ளனர்.
(05-05-2025, சென்னை)
பகுத்தறிவு பாவலர் காரைக்குடி ஆ.பழநி நூல்கள் நாட்டுடைமை

Leave a Comment