அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு, ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் உள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை சேவை, தனியார் & தன்னார்வலர்கள் பங்களிப்புடன் தொடங்கப்படும் என்றும் டயாலிசிஸ் நோயாளிகளுக்கு 150 மி.லி., பால், 2 வேக வைத்த முட்டை, 50 கிராம் சுண்டல், 3 பிஸ்கட்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.