பெரியகுளம், மே 7- பெரியகுளம் நூலகத்தில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா 3.5.2025 அன்று எழுச்சியோடு நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் மு.அன்புக்கரசன் வரவேற்புரையாற்றினார். கழக காப்பாளர் ச.இரகுநாகநாதன் தலைமை வகித்தார்.
மாவட்டத்தலைவர் ம.சுருளிராஜ், பெரியார் பிஞ்சு அரிகரன், அரசுஊழியர்அய்க்கியபேரவை மாநில துணைச்செயலாளர் சுசி.மாணிக்கவாசகம், கவிஞர் செ.நாகநந்தினி, கழகபேச்சாளர் கண்ணன், ஆகியோர் புரட்சிக் கவிஞரின் சிறப்பை எடுத்துரைத்தார்கள். சட்டபேரவை உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் பங்கேற்று கவிஞர் செ.நாக நந்தினிக்கு புரட்சிக்கவிஞர் விருது வழங்கியும், அரிகரனுக்கு பயனாடைபோர்த்தியும், திராவிடர் கழகத்தின் சிறப்பான தொண்டுக்கு பாராட்டு தெரிவித்ததும் உரைநிகழ்த்தினார்.
சட்டமன்ற உறுப்பினருக்கு கழக பேச்சாளர் ஆண்டிப்பட்டி கண்ணன் புத்தகம் வழங்கினார். நிறைவாக சட்டக்கல்லூரி மாணவர் மு.இளமாறன் தந்தை பெரியார் கொள்கை வழிநின்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படைத்திட்ட கவிதைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். இறுதியில் நூலகர் சவுடமுத்து நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது.