சென்னை, மே 6- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) நடத்தும் காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை) பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி
மே 10, 2025 ஆகும்.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnusrb.tn.gov.in மூலம் இணையத்தில் விண்ணப் பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க, கடைசி தேதிக்கு முன்னதாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படு கிறார்கள்.