செய்யாறு, மே 5- செய்யாறு மாவட்டக் கழக இளைஞரணி செயலாளர் செ.அரவிந்த்- பி.ஹேமாவதி இணையர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 30.4.2025 மாலை 7 மணிக்கு செய்யாறு கே.ஜி.மகாலில் நடைபெற்றது.
செய்யாறு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய தொழிலாளர் அணியின் துணை அமைப்பாளருமான வ.அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். காஞ்சிபுரம் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நாத்திகம் நாகராசன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அ.வெ.முரளி, செய்யாறு நகர கழக தலைவர் தி.காமராசன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினர். மண நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வி.வெங்கட்ராமன் வரவேற்றார்.
மணமக்களின் பெற்றோர் தி.செல்வராஜ் சிவகுமாரி, வெ.பிரபாகரன் கோடீஸ்வரி, மாவட்டச் செயலாளர் பொன்.சுந்தர், என்.கஜபதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் என்.வி.கோவிந்தன், முனைவர் மு.தமிழ்மொழி, என்.சீனுவாசன், இரா.சிவக்குமார், வடமணப்பாக்கம் மு.வெங்கடேசன், ப.கோகுல், மு.ரங்கராஜன், பா.யோகாநாத், செ.தினேஷ், வே.கோபிநாத், அ.கார்த்திக், அ.சிபிசக்கரவர்த்தி, மோ.வினேஷ், க.காபர் அலிகான், லோ.ஜெகன், மு.கார்த்திக், கோ.மஞ்சுநாதன், ப.அமர்நாத், நா.நவீன், நந்தகுமார், யோகாநந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.