கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

5.5.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ராமன் ஒரு புராண கதாபாத்திரம் என அமெரிக்க பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடனான உரையாடலில் ராகுல் கருத்து.

* இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின் டில்லியில் நடந்த வன்முறை மிகப் பெரிய தவறு; காங்கிரஸ் சார்பில் தான் பொறுப்பேற்பதாக ராகுல் பேச்சு.

* ‘சமஸ்கிருதம் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளுக்கும் தாய் மொழியாம்’ – திருவாய் மலர்ந்துள்ளார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

*அரசியல் சட்டப் பிரிவு 15(5)இன் படி தனியார் கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீடு கோருவோம் என காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம். மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ள தொண்டர்களுக்கு வேண்டுகோள்.

தி இந்து:

* வக்ஃபு சட்ட திருத்தம் இஸ்லாமியர்களின் மத உரிமையை பறிக்காது என்ற ஒன்றிய அரசின் பதில் வாதங்கள் உண்மைக்கு புறம்பானது.ஆகும். இந்த சட்ட திருத்தம் வக்ஃபு சொத்துக்களை கைப்பற்றும் விதமாகவே உள்ளது. இஸ்லாமிய மதத்தின் சட்டம், அவர்களின் உரிமையை ஒழிக்கும் விதமாக உள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் வாதத்தை நிராகரிப்பது மட்டுமல்லாமல், வக்ஃபு வாரிய புதிய சட்டத் திருத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து அதை ரத்து செய்ய வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுபிரதி மனுவில் கூறப்பட்டுள்ளது.

*காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சமூக நீதியை உறுதி செய்வதற்கான முயற்சிகளை முன்னிலைப்படுத்த காங்கிரஸ் கட்சி ஒரு திட் டத்தை வகுத்த போதிலும், நரேந்திர மோடி அரசு ஜாதி எண்ணிக்கையில் “அவநம்பிக்கையான தலைகீழ் மாற்றங்கள்” செய்வதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘ஓபிசிக்களுக்கான ஜாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு உத்தரவிட வேண்டாம் என்று மோடி அரசு உச்ச நீதிமன்றத்தை வெளிப்படையாக வலியுறுத்தியது’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*மாநிலங்களவையில் நாடாளுமன்ற கட்சித் தலை வராக ஜான் பிரிட்டாஸை சிபிஎம் நியமித்தது.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *