கடவுள் நம்பிக்கை போனால், மக்களிடம் கடவுள் நம்பிக்கையான முட்டாள்தனத்தை ஊட்டாமலிருந்தால் தாங்கள் வாழ முடியாது என்று பணக்காரர்கள் நம்புகின்றனர். அதனால் தங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் மக்களுக்கு அதனை ஊட்டுகின்றனர். அரசாங்கமும் மக்களை முட்டாள்களாக வைக்காவிட்டால் தாங்கள் ஆட்சி செய்ய முடியாதே? பதவிக்கு வர முடியாதே? என்று பயந்து மூடநம்பிக்கையை வளர்க்கப் பாடுபடுகிறது. பார்ப்பனர்களும் இவைகள் அழிந்தால் தங்களின் சுகபோக வாழ்வு, பெருமை இவைகள் அழிந்துபோய் விடுமே என்று பயந்து இவைகளைப் பாதுகாக்கப் பாடுபடுகின்றனர். இவை நம்மை காட்டுமிராண்டியாக்கிட எடுக்கின்ற முயற்சியன்றி வேறு என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’