புகார் அளிக்க காவல்நிலையம் வருவோர் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, மே 4 ஏதேனும் ஒரு குற்றச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க காவல்நிலையம் வரும் ஒவ்வொருவரும் மிகவும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-இன்படி, அது அடிப்படை உரிமை என்றும் தெரி வித்துள்ளது.

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தக் கருத்தை வலியுறுத்தி யிருக்கிறது.

மோசடியாக ரூ.13 லட்சத்தை ஏமாந்தவர் அது தொடர்பாக புகார் அளிக்க காவல்நிலையம் வந்தபோது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்தது மற்றும் தன்னை தரக்குறைவாக நடத்தியதை எதிர்த்த வழக்கில், தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம், சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சத்தை அபராதமாகப் பிடித்து அதனை சம்பந்தப்பட்டவருக்கு அளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்குப் பிறப்பித்த உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை உறுதி செய்திருக்கும் உச்ச நீதிமன்றம், ஏதேனும் ஒரு குற்றச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க காவல் நிலையம் வரும் ஒவ்வொருவரும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். இது இந்திய அரசியல மைப்புச் சட்டப்பிரிவு 21-இன் படி இந்திய குடிமகனின் அடிப் படை உரிமையாகும் என்று தெரிவித் துள்ளனர்.

என்ன  நடந்தது?

மோசடியில் பணம் இழந்த இளைஞர் தனது பெற்றோருடன் சிறீவில்லிபுத்தூர் காவல்நிலையம் சென்றுள்ளார். காவல் ஆய்வாள ரிடம் புகார் மனு அளிக்கப் பட் டுள்ளது. அதில், மூன்று பணப் பரி வர்த்தனைகள் வெவ்வேறு இடங்களிலிருந்து நடத்தப்பட் டுள்ளதால், காவல் ஆய்வாளர் அனுமதி இல்லாமல் இந்த புகாரை ஏற்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

மீண்டும் அவர்கள் காவல் நிலையம் வந்து காவல் ஆய்வா ளருக்காக பல மணி நேரம் காத் திருந்த பிறகு, காவல் ஆய்வாளர் வந்து, புகாரை ஏற்க முடியாது என்று கூறி, மனுதாரரின் தாயையும் தகாத வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.

இது குறித்து தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து, மனுதாரருக்கு ரூ.2 லட்சம் இழப் பீடாக வழங்க தமிழ்நாடு உள்துறை கூடுதல் முதன்மைச் செயலாளருக்கு உத்தரவிட்டது. இந்தத் தொகையை சிறீவில்லிபுத்தூர் காவல் ஆய்வாளரிடமிருந்து வசூலித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவையும், அதனை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையும் எதிர்த்து பவுல் யேசு தாசன் (காவல் ஆய்வாளர்) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்ததுடன், மனுதாரரின் தாயை தகாத வார்த்தைகளால் பேசியிருக்கிறீர்கள். இது மனித உரிமைகளுக்கு எதிரானது.

அதாவது, மனித உரிமைகள் சட்டப் பிரிவு 2(1)(டி) மனித உரி மைகளை “ஒரு தனிநபரின் வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் தொடர்பான உரிமைகள், அரசமைப்பால் அல்லது பன்னாட்டு உடன்படிக்கைகளில் உள்ளடக்கப்பட்ட மற்றும் இந்தியாவில் நீதிமன்றங்களால் செயல்படுத்தக்கூடிய வகையில் உறுதி செய்யப்படுகிறது” என்று வரையறுக்கிறது.

இந்த வழக்கின் குறைந்தபட்ச குற்றச்சாட்டான முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்திருப்பதே அதிர்ச்சியளிக்கிறது. புகார் அளிக்க வருவோருக்கு குறைந்த பட்சம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் காவல் துணை ஆய்வாளர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. மேலதிகாரியிடம் அனுப்பியிருக்கிறார். அவரும் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யாமல் மனுதாரரின் தாயாரை தகாத வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.

எனவே, இந்த வழக்கில் மனித உரிமைகள் ஆணையமோ, சென்னை உயர் நீதிமன்றமோ தவறான தீர்ப்பை அளிக்கவில்லை என்று முடிவுக்கு வருகிறோம். இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். இங்கே மேல்முறையீடு செய்திருக்கும் மனுதாரரின் நடத்தையை ஆராய்ந் ததில், மனுதாரரின் தரப்பில் மனித உரிமைகள் மீறல் இருப்பதாக ஆணையமும் உயர் நீதிமன்றமும் சரியாகக் கண்டறிந்தன. எனவே, எந்த தலையீடும் தேவையில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *