போதைப் பொருள் பயன்பாட்டின் ‘அபாயங்களை விளக்கவும் – விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாரத்தான் ஓட்டப் பந்தயம் – 2025’
வல்லம், மே 4 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மாரத்தான் ஓட்டப் பந்தயம் 01.05.2025 அன்று பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அனைவருக்கும் போதைப் பொருள் பயன்பாட்டின் அபாயங்களை விளக்கவும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த மாரத்தான் ஓட்டம் பந்தய நிகழ்வு பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டது.
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் பத்து கிலோ மீட்டர் ஓட்டத்திற்கான நிகழ்ச்சியினை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து வல்லம் துணை காவல் கண்காணிப்பாளர் கே.கணேஷ்குமார் அய்ந்து கிலோ மீட்டர் ஓட்டத்திற்கான நிகழ்ச்சியினை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு திரைப்படத் துறையைச் சார்ந்த துரை சுதாகர் மற்றும் தஞ்சாவூர் – இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூத்த மண்டல மேலாளர் வெங்கட்சுப்ரமணியன் ஆகியோர் மூன்று கிலோ மீட்டர் ஓட்டத்திற்கான நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பெரியார் கல்வி நிறுவனத்தின் நிர்வாக செயற்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் வெ.இராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு ஓட்டப் பந்தயத்தில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டுக்களையும் பரிசினையும் வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக திருவையாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், தஞ்சாவூர் மாநகராட்சி துணைமேயர் மரு அஞ்சுகம் பூபதி, கிரிஸ் மருத்துவமனை மரு.உஷாநந்தினி, வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், A2Z மருத்துவமனையின் இயக்குநர் ஆர்.எம்.பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் 10 கிலோமீட்டர் தூரத் திற்கான முதல் பரிசினை எம்.சத்தீஸ்குமார், தஞ்சாவூர், இரண்டாம் பரிசினை இராமேஸ்வரன் மஞ்சா, மகாராட்டிரம், மூன்றாம் பரிசினை நிராச்சி சாலக்கி, மத்தியப் பிரதேசம் பெற்றனர். மேலும் ஏழு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
10 கிலோமீட்டர் பெண்களுக்கு உண்டான போட்டியில் முதல் பரிசினை துளசிசிறீ, இரண்டாம் பரிசினை ஜெயராணி, மூன்றாம் பரிசினை டி.தீக்சா, ஆகியோர் வென்றனர்.
5 கிலோமீட்டர் ஆண்களுக்கு உண்டான போட்டியில் முதல் பரிசினை வருண், இரண்டாம் பரிசினை ஹரிஸ், மூன்றாம் பரிசினை பிரேம்குமார், ஆகியோர் வென்றனர். பெண்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் முதலிடத்தினைய, யாஸ்சிஸ் சச்சனா, இரண்டாம் இடத்தினை புவிசா, மூன்றாம் இடத்தினை யோகவர்த்தினி பெற்றனர்.
3 கிலோமீட்டர் ஆண்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசினை மாரீஸ்சரத், இரண்டாம் பரிசினை ஜெயக்குமார், மூன்றாம் பரிசினை கோவிந்தராஜன், பெண்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசினை லத்திக்கா சிறீ இரண்டாம் பரிசினை பிரதீஷா, மூன்றாம் பரிசினை தன்யா சிறீ ஆகியோர் வென்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து ஆரோக்கியமான மற்றும் போதைப்பொருள் இல்லா வாழ்க்கையை ஊக்குவித்து அனைவரும் ஒன்றிணைந்து போதைப் பொருள் பழக்கத்துக்கு எதிராக சமூகத்தை கல்வி மற்றும் உற்சாகத்துடன் தூண்டும் வலிமையாக இந்த மாரத்தான் ஓட்டம் செயல்பட மற்றும் போதைப் பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்க அனைவரும் பெரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.