நேற்று (3.5.2025) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், பல்கலைக்கழகங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு, தனியார் கலைக் கல்லூரிகள் கூட்டமைப்பு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் சார்பில் நடைபெற்ற மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் சார்பில் வெள்ளியிலான செங்கோல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. இவ்விழாவில், திராவிடர் கழகத் தலைவர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் ஆசிரியர் கி. வீரமணி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, தொல். திருமாவளவன். ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொஹிதீன், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு தலைவர் முனிரத்தினம், விஅய்டி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், எஸ்.அய்.இ.டி. கல்விக் குழுமத்தின் ஆலோசகர் நீதிபதி அக்பர் அலி, லயோலா மேலாண்மை கல்லூரி இயக்குநர் சொ.ஜோ.அருண், தியாகராசர் கல்வி குழும நிர்வாக இயக்குநர் தியாகராஜன், GRG கல்வி குழுமத்தின் நிறுவனர் டாக்டர் நந்தினி ரங்கசாமி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, Excel கல்வி குழுமத்தின் நிறுவனத் தலைவர் நடேசன், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், மேனாள் துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.