தமிழர் தலைவர் இரங்கல்
உடுமலைப் பேட்டையைச் சார்ந்த டாக்டர் முத்துசாமி அவர்கள் நீண்ட காலமாக துபாயில் சென்று தங்கி, டாக்டராக பல ஆண்டுகள் பணிபுரிந்து, துபாயில் பிரபல தொழில் அதிபர்கள், ஷேக்குகள் உள்பட அனைவர் பலரது நல்லெண்ணத்தையும், அன்பையும், ஆதரவையும் பெற்றார்்.
தான் ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை பொதுப் பணிக்குச் செலவழித்த ஒரு பெரும் உள்ளம் கொண்ட மாமனிதர். நமது கல்வி நிறுவனத்திற்கும் உதவியுள்ளார்.
அவருக்கு மிகப் பெரும் உறுதுணையாகவும், எவரிடத்திலும் வாஞ்சையோடும், பாசத்தோடும் பரிவோடும் நடந்து கொள்ளும் பண்பாளர் – அவரது வாழ்விணையர் திருமதி கற்பகவல்லி (வயது 81) அவர்கள்.
சிறிது கால உடல் நலக் குறைவு காரணமாக அவர் நேற்று (2.5.2025) மாலை 4 மணிக்கு கோவை – உடுமலையில் காலமானார் என்ற துயரச் செய்தி அறிந்து நானும், குடும்பத்தினரும் மிகவும் துயருற்று வருந்தினோம்.
அவர்களுக்கு இரண்டு மகன்கள். ஒருவர் துபாயில் உள்ள அசோக், மற்றொருவர் அமெரிக்காவில் உள்ள அருண் அவர்கள்.
காலையில் செய்தி அறிந்தவுடன் திரு. அசோக் அவர்களிடம் நானும், மோகனா, அன்புராஜ் மற்றும் குடும்பத்தினரும் தொலைபேசியில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரி வித்தோம்.
அமெரிக்காவிலிருந்து அருண் நாளை (4.5.2025) காலை வருகிறார். நாளை பகல் 1 மணியளவில் உடல் உடுமலைப்பேட்டையில் அடக்கம் செய்யப்படவிருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
பேரன்புக்குரிய அந்த அம்மையாரின் மறைவு அந்தக் குடும்பத்திற்கு மட்டுமல்ல, நம்மைப் போன்ற பல குடும்பங்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
3.5.2025
சென்னை