கனிமொழி எம்.பி., கருத்து
சென்னை, ஜூலை 1 ஆளுநரின் அதிகாரம் என்னவென்று ஆர்.என்.ரவிக்குத் தெரியாமல் போனது வேடிக்கையளிக்கிறது என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்.
தி.மு.க. துணை பொதுசெயலாளரும், மக்க ளவை உறுப்பினருமான கனிமொழி தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
ஒரு நியமன பதவியிலிருக்கும் ஆளுநரின் அதிகாரம் என்னவென்று ரவிக்கு தெரியாமல் போனது வேடிக்கையளிக்கிறது. அரசமைப்பு சட்டத்திற்கும் ஒரு மாநிலத்தின் இறையாண் மைக்கும் எதிராகச் செயல்படுவதை நிறுத்தி விட்டு, அவர் தனது ஒரே கடமையான ஆளுநர் பணியைச் செய்யலாம்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. குறள் 467.
கலைஞர் உரை: நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.
இவ்வாறு டிவிட்டர் பதிவில் கூறப்பட் டுள்ளது.