சென்னை, மே 3 தமிழ்நாடு அரசு அம்பேத்கரின் ஆக்கங்களை பதிப்பிக்கத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியுள்ளது. மராட்டிய அரசு 1979இல் அம்பேத்கரின் எழுத்துகளை 37 தொகுதிகளாக ஆங்கிலத்தில் வெளியிட்டது. இந்தத் தொகுதிகளைத்தான் ஒன்றிய அரசின் அம்பேத்கர் பவுண்டேசன் நிதியுதவியுடன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் (என்சிபிஎச்) வெளியிட்டது. இந்தத் தொகுதிகளைச் செம்மைப்படுத்திக் கொண்டுவர தமிழ்நாடு அரசு, என்சிபிஎச் உதவியுடன் ஒரு குழுவை அமைத்தது.
மேலும் அம்பேத்கரின் ஆக்கங்களை அனைவரும் வாசிக்க வேண்டும் என்ற நோக்கில் மக்கள் பதிப்பாக மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யவும் தமிழ் நாடு அரசு முடிவெடுத்தது. அதன்படி ஒவ் வொரு தொகுதிக்கும் ரூ.100 விலை நிர் ணயிக்கப்பட்டது. இந்தக் குழுவின் தலை மைப் பதிப்பாசிரியராக பேராசிரியர் வீ.அரசு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையி லான குழு மிக விரைவாகப் பணியாற்றி முதல் கட்டமாக 10 தொகுதிகளைக் கொண்டு வந்துள்ளனர். இன்றைய காலகட்டப் பொருத்தப் பாடுகளுக்கு ஏற்ப இந்தத் தொகுதிகளை பதிப்புக் குழு வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. பழைய தொகுப்பின் வடமொழிக் கலப்பும், ஆங்கிலச் சொற்களின் பயன்பாடும் இந்தத் தொகுப்பில் மாற் றப்பட்டு நல்ல தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட் டுள்ளன. அரசியல் கருத்துகளை மொழிபெயர்த் ததில் உள்ள இடைவெளியும் நீக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் பயன்படுத்திய பண்பாட்டுக் கூறுகள் சார்ந்த சொற்களுக்காக இதில் தனிக்கலைக்களஞ் சியமும் உருவாக்கப் பட் டுள்ளது.
அம்பேத்கர் ஆக்கங் களில் உரை, கையெழுத்துப் பிரதி, அச்சில் வந்தது என்கிற ரீதியில் எல்லாமும் இந்தத் தொகுப்பில் வகைப்படுத்தப்பட்டுள் ளன. அம்பேத்கர் தனது ஆய்வுக்கு பயன்பட்ட ஆங்கில நூல்களின் விவரங்களை ஏற்கெனவே வந்த மொழிபெயர்ப்பில் தமிழில் கொடுத்துள்ளதாக அரசு குறிப்பிடுகிறார். இந்தப் புதிய தொகுப்பில் மூல நூலில் அம்பேத்கர் கொடுத்த ஆங்கில விவரங்கள் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளன.