டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*மோடி அரசு அறிவித்த ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பாஜக ஆதரவாளர்கள் மற்றும் காரியகர்த்தாக்கள் எதிர்ப்பு.
* இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
*11 ஆண்டுகால “பிடிவாதமான மறுப்பு”க்குப் பிறகு மோடி அரசாங்கத்தை ஜாதி வாரி கணக்கெடுப்பு கோரிக்கையை ஏற்க வைத்துள்ளார் ராகுல் என காங்கிரஸ் பாராட்டு.
* ‘சபர்மதி எக்ஸ்பிரஸில் இருந்த காவலர்கள் 2002 கோத்ரா ரயில் எரிப்பைத் தடுத்திருக்கலாம். ரயிலில் ஏறத் தவறிய 9 ரோந்து காவலர்களை பணி நீக்கம் செய்ததை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 2027 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, பத்திரிகையாளர்களுடன் சந்திப்பை அதிகப்படுத்தி வருகிறார் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்
– குடந்தை கருணா