“பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரிகள், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பரப்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை, அமைதியையே விரும்புகிறோம். கணவர் காட்டிச் சென்ற வழியில் நாட்டுக்கு சேவை ஆற்றுவேன்”
பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் பிறந்த நாளை ஒட்டி, நடத்தப்பட்ட குருதிக் கொடை முகாமில் அவரது மனைவி ஹிமான்ஷி உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
திருமணமான சில நாட்களில் தேனிலவுக்காக காஷ்மீர் வந்த வினய் நர்வால் ஏப். 22 அன்று பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
‘வெறுப்பு வேண்டாம்… அமைதியே வேண்டும்..!’ – ஹிமான்சி உருக்கம்
Leave a Comment