புதுடில்லி, மே 2 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.
கார்கே எழுதியுள்ள கடிதத் தில், ‘இந்த நேரத்தில் ஒற்றுமை, உறுதிப்பாட்டை நாம் உணர்த்த வேண்டும். நாடாளுமன்ற நாட சிறப்புக் கூட்டத் தொடரை நடத்துவதன் மூலம் இதை உணர்த்த முடி யும். அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக நாடாளுமன்றம் மூலம் நமது எதிர்ப்பைத் தெரிவிப்பது சரியான நடவடிக்கையாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தி தனது கடிதத்தில், ‘பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா உறுதியாகவும், ஒற்றுமையாகவும் உள்ளது என்பதை உணர்த்த வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக்கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. இதன்மூலம் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் ஒற்றுமையையும், எதிர்ப்பையும் தெரிவிக்க முடியும்’ என்று கூறியுள்ளார்.
முன்னதாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் உள் ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவை சுயேச்சை உறுப்பினர் கபில் சிபல் ஆகியோரும் இதே கோரிக்கையை முன்வைத்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்
ரயில் பயணச்சீட்டு
முன்பதிவில் சில மாற்றங்கள்
சென்னை, மே.2- ரயில் பயணச் சீட்டு முன்பதிவில் புதிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.
முக்கிய மாற்றங்கள்
ரயில் பயணச் சீட்டு முன்பதிவுகளின் போது ஏற்படும் சிக்கல்கள் குறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு நாள்தோறும் பல்வேறு புகார்கள் வந்தவாறு இருக்கிறது. குறிப்பாக, முன்பதிவு தேதிகளில் குழப்பம், தட்கல் பயணச் சீட்டுகளை தவறாக பயன்படுத்துதல் போன்ற பிரச்சினைகளால் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகிறார் கள்.
எனவே, இதுபோன்ற புகார்களை சரி செய்து விரைவாகவும், வெளிப்படையாகவும் ரயில்வே சேவையை வழங்க இந்திய ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, ரயில் பயணச் சீட்டு முன்பதிவில் முக்கிய மாற்றங்களை இந்திய ரயில்வே செய்துள்ளது.
அதன்படி, தட்கல் சேவை மூலம் கடைசி நேரத்தில் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. அலைபேசியில் அய்.ஆர்.சி.டி.சி. செயலி மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்தால் இனி அலைபேசி அழைப்பு மூலம் பயணச்சீட்டு முன்பதிவு உறுதிபடுத்தப்படும்.
அமலுக்கு வந்தது
ஒருவரின் இணையதள அய்.டி.யில் இருந்து ஒரு நாளைக்கு 2 தட்கல் பயணச் சீட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணச்சீட்டுகளுக்கு, முழுப் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இதற்கு முன்பு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்து கொள்ளப்படும்.
ரயில் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பாக டிக்கெட்டை ரத்து செய்தால், 75 சதவீத பணம் திரும்பக் கிடைக்கும். புறப்படுவதற்கு 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 50 சதவீத பணம் திரும்ப கிடைக்கும்.
24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், எந்தத் தொகையும் திரும்பக்கிடைக்காது. இதற்கு முன்பு கால அட்டவணை தயார் செய்வதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்தால் மட்டுமே பணம் திரும்ப கிடைக்காத நிலை இருந்தது. ‘சார்ட்’ தயாரிக்கும் நேரத்தில் உறுதிப்படுத்தப்படாமல் இருக்கும் காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணச் சீட்டுகளுக்கு, முழு பணத்தைத் திரும்பப் பெறும் வசதியும் உள்ளது. இந்த தெளிவான விதிகள் பயணிகள் பயணச் சீட்டை ரத்து செய்வதற்கு விதிக்கப்படும் கட்டணங்கள் குறித்த குழப்பத்தை சரி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த முக்கிய மாற்றங்கள் 1.5.2025 முதல் அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.