திருப்பத்தூர், மே 2- திருப்பத் தூர் மாவட்ட பகுத்தறிவு எழுத் தாளர் மன்றம் சார்பில் பாவலர் அறிவுமதியின் பவள விழா திருப்பத்தூர் நகர் ஓட்டல் ஹில்ஸில் 27.04.2025 அன்று காலை 10.00 மணியளவில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது.
இவ்விழா திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி.எழில ரசன் தலைமையில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற பொறுப்பாளர்- பதிப்பாளர் இளம்பரிதி வரவேற்பில் நடைப்பெற்றது.
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப் பாளராக கவிமாமணி பேராசிரியர் தி. மு. அப்துல் காதர் மற்றும் தொழிலதிபர் விஜயா கேலக்ஸி மதியழகன், தொழிலதிபர் சாமி, திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் நா. சுப்புலட்சுமி ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள். பெரியார் பிஞ்சு இன்பா சிற்றரசன் பிறந்த நாள் வாழ்த்துப்பா பாடினார்.
பாவலர் அறிவுமதி தனது ஏற்புரையில் தந்தை பெரியார் மனித சமத்துவதிற்காக தனது இறுதி மூச்சு வரை மூத்திரப் பையை சுமந்து கொண்டு, அய்யோ , அம்மா என்று முனகிக்கொண்டு வாழ்ந்தவர். தனது வாழ்நாளில் மிக எளிமையாக, மிக, மிக சிக்கனமாக வாழ்ந்தவர். அவரின் எளிமையை, சிக்கனத்தைத் தான் என் வாழ்நாளில் கடைபிடித்து புகழ்ச்சிக்கு இடம் கொடுக்காமல் வாழ்ந்து வருகிறேன். இந்த விழா கூட வேண்டாம் என்று தவிர்த்தேன். ஆனால், கே. சி. எழிலரசன் மற்றும் இளம்பரிதி அன்பின் வேண்டுகோளை ஏற்று மிக எளிமையாக விழா நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் இவ் விழாவில் பங்கேற்கிறேன். கடந்த 15 ஆண்டுகளாக சங்க இலக்கியங்களில் உள்ள சிறப்புகளை மிக எளிய வடிவில் இன்றைய தலைமுறைக்கு கடத்த வேண்டும், இவை தமிழுக்கு நான் செய்யும் சிறப்பாக அமையும் என்ற வகையில் உழைத்துக் கொண்டி ருக்கிறேன் என்று தனது ஏற்புரையில் பேசினார்.
தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில் புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பது. புத்தகங்களை அறிமுகம் செய்வது, புத்தகங்களை வெளியிடுவது, இளைய தலைமுறையினர் இடையே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி பகுத்தறிவை வளர்ப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற அமைப்பாளர் கவிஞர் சோலை பிரியனுக்கு அவர் எழுதிய கவிதைகளையும், எழுத்துக்களையும் பாராட்டி அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில், பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், மகளிர் பொருளாளர் மகளிரணி எ. அகிலா, மாவட்ட துணைத் தலைவர் சி. தமிழ்ச்செல்வன், மாவட்டச் செயலாளர் பெ. கலைவாணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி. ஏ. சிற்றரசன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ. டி. சித்தார்த்தன், நகரத் தலைவர் காளிதாஸ்,விடுதலை வாசகர் வட்டத் தலைவர் ஞானம், விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் வ. புரட்சி, விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் எம். என். அன்பழகன், மாவட்ட மகளிரணி தலைவர் இரா. கற்பகவல்லி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் விஜயா அன்பழகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.