நாகர்கோவில், மே 2- பால் வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபிறகு நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் மனோதங்கராஜ் பெரியார் மய்யத்திற்கு (குமரிமாவட்ட கழக அலுவலகத்திற்கு) வருகை தந்தார்.
குமரிமாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் க மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு ஆகியோர் அமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்று தந்தை பெரியாருடைய நூல்களையும் வழங்கினர். 92 வயதிலும் தந்தை பெரியாருடைய சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தமிழர் தலைவர் ஆசிரியருடைய பணிகளை அமைச்சர் வியந்து பாராட்டினார்.உடன் திமுக குமரி (கி) மாவட்டச் செயலாளர் மேயர் ரெ.மகேஷ் திராவிடர்கழக மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர் உடனிருந்தனர்.