திருச்செங்கோடு, மே 2- திருச் செங்கோடு நகர இளைஞரணி கலந்து ரையாடல் கூட்டம் 27.4.2025 மாலை 6 மணி அளவில் நகர திராவிடர் கழக தலைவர் மோகன் அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருச்செங்கோடு நகர இளைஞர்அணி தலைவர் நந்தகுமார் தலைமையில் திருச்செங்கோடு நகரத் தலைவர் வெ மோகன் முன்னிலையில் பொதுக்குழு உறுப்பினர் க பொன்னுசாமி, பள்ளிபாளையம் ஒன்றிய அமைப்பாளர் மு சீனிவாசன் குமாரபாளையம் நகர தலைவர் சு சரவணன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஆனந்த குமார் கணேசன் கருத்துரை நிகழ்த்தினர்.
இளைஞரணி செயலாளர் பாரதிராஜா சமூக வலைதள இணைய செயல்பாடு மூலம் இயக்கத்தை மக்களிடம் எவ்வாறு கொண்டு செல்வது கருத்துகளை எடுத்து கூறினார். திருச்செங்கோடு நகர செயலாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்
புதிய தோழர்கள் எலச்சிபாளையம் பிரசாந்த் குமரமங்கலம் ரவிக்குமார், கந்தசாமி கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
குமரமங்கலம் எலச்சிபாளையத்தில் விரைவில் புதிய கிளைக் கழகம் துவக்க விழா நடத்துவது அந்தப் பகுதி தோழர்களை இணைத்து பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன தலைவர் க.சண்முகம் அவர்களையும் மாவட்டத் தலைவர் ஆ.கு.குமாரையும் தலைமைக் கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமனையும் கலந்து ஆலோசித்து மிக சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது
இனிவரும் திருச்செங்கோடு நகர கலந்துரையாடல் கூட்டம் ஒவ்வொரு தோழர்கள் இல்லத்திலும் மாதம் ஒருமுறை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டம் முடிவில் திருச்செங்கோடு நகர செயலாளர் முத்துகுமார் நன்றி கூறினார்.