செங்கல்பட்டு, மே 2- செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 புதிய கிளைகளை தொடங்குவது மற்றும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாள் விழாவை மாவட்டம் முழுவதும் எழுச்சியாக நடத்துவது என மாவட்ட கழக நிர் வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.
செங்கல்பட்டு மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் 27-04-2025 அன்று மாலை 6.00 மணி அளவில் மறைமலை நகர் திருவள்ளுவர் மன்றத்தில் மாவட்டத் தலைவர் அ.செம்பியன் தலைமையில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப் பாளர் மு.பிச்சைமுத்து கடவுள் மறுப்பு கூற, மாநில இளைஞரணி துணை செயலாளர் மு.அருண்குமார் வரவேற்பு உரையுடன், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வத்தின்ன் கருத்துரையுடன் மிக எழுச்சியாக நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் புதியதாக அய்ந்து கிளைகளை அமைப்பது
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாள் விழாவை மாவட்டம் முழுவதும் எழுச்சியாக நடத்துவது
மாவட்டம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது
விடுதலை, உண்மை ஏடுகளுக்கு சந்தா சேர்ப்பது என – தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ம.நரசிம்மன், பொதுக்குழு உறுப்பினர்கள் செங்கை சுந்தரம், அ.பா.கருணாகரன், மாவட்ட துணை செயலாளர் பா.முருகன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் அ.சிவக்குமார், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் சி. தீனதயாளன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப் பாளர் மு.பிச்சைமுத்து, பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் சகாயராஜ், மறைமலைநகர் செயலாளர் விஜயராகவன், மறைமலைநகர் அமைப் பாளர் முடியரசன், தோழர் ஏழுமலை, திருவள்ளுவர் மன்ற செயலாளர் சமத்துவமணி, திருவள்ளுவர் மன்ற பொறுப்பாளர் பழனி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
மறை மலைநகர் தலைவர் ம.வெங்கடேசன் நன்றி உரையுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.