திருச்சி, மே 2- திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72ஆவது பிறந்தநாள், புரட்சியாளர் அம்பேத்கர், அன்னை மணியம்மையார் பிறந்த நாள்விழா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் ஏப். 26 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் உறையூ ரில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ப.க.செயலாளர் பி.மலர்மன்னன் வரவேற்பு ரையாற்றினார்.
மாநகர ப.க. செயலா ளர் ஜோ.பென்னி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்டச் செயலாளர் சு.மகாமணி, மாணவர் கழக மாவட்ட தலைவர் ஆ.அறிவுச்சுடர், பொதுக் குழு உறுப்பினர்கள் கனகராஜ், சங்கிலிமுத்து, மாவட்ட மகளிரணித் தலைவர் ரெஜினா பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் ம.க.இ. க.செழியன், மாணவர் கழக அமைப்பாளர் சபரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரவீன்குமார், விஜயராகவன், அண்ணா வளைவு நகர தலைவர் விடுதலை கிருஷ்ணன், தில்லைநகர் பகுதி தலைவர் சுல்தான், ஜெயில் பேட்டை சேவியர், மாநகர அமைப்பாளர் ரா.பேபி, காவியா, தமிழழகன், செல்வம், ப.க.தலைவர் மதிவாணன், ராய்ராயன், இளவழகன், இராஜேஸ்வரி, திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர், ஜீவா, கிருஷ்ணமூர்த்தி, அண்ணாதுரை, குத்பூதீன், ராஜேந்திரன், முருகன், ஜெயராஜ், ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண் டனர். நிறைவாக மாநகர தலைவர் வ.ராமதாஸ் நன்றி கூறினார்.