திருவெறும்பூர், மே 2- 27.04.2025, ஞாயிறன்று மாலை, பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் ம.சங்கிலிமுத்து தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் வரவேற்புரை கூறினார்.
“பெரியார் கொள்கையும், பெண்கள் முன்னேற்றமும்” எனும் தலைப்பில் பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை சிறப்புரை ஆற்றினார். கடந்த கால பெண்கள் நிலை, இன் றைக்கு மாறியிருக்கிற தலைகீழ் புரட்சி, அதற்குப் பெரியார் கருத்துகள் எப்படி பயன்பட்டன என்பது குறித்து விளக்கினார்.
திருச்சி மாவட்டத்தில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் சாதித்து வரும் பெண்கள் குறித்தும் எடுத்துக் கூறினார். இளம் தலைமுறை பெண் குழந்தைகள் கூட சுயசிந்தனை, கல்வி, ஆற்றலில் எந்தளவு உயர்ந்து நிற்கிறார்கள் எனவும் விரிவாக எடுத்துரைத்தார்.
இயக்கம் சாராத புதிய மகளிரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். இறுதியாகக் கருத்து தெரிவித்த அவர்கள், “பெரியாருக்கும், பெண்கள் வளர்ச்சிக்குமான இந்த உரை எங்களை மிகவும் ஈர்த்தது எனவும், பெண்களாகிய நாம் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்கிற பெருமித செய்தியையும் அறிந்து கொண்டோம் எனவும் கூறினார்கள்.
நிகழ்ச்சியைத் திராவிடர் தொழிலாளர் கழகச் செயலாளர் ஆ.அசோக்குமார் ஒருங்கிணைத்தார். திருவெறும்பூர் நகரத் தலைவர் அ.சிவானத்தம் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ச.கணேசன், விடுதலை கிருட்டினன், வெ.ரூபியா, கரு.புனிதவதி, அ.தமிழ்க்கவி, சி.நிர்மலா, ம.பி.அனுராதா, ஷமீம், சி.கோவிந்தராஜுலு, பு.வி.கியூபா, க.புனிதா, அ.அன்புலதா, எழில்புத்தன், செள.சந்திரன், மா.மார்ஷலின் செலஸ், ப.கெள.யாழினி, சி.பஞ்சலிங்கம், பெ.ரங்க நாயகி, போ.ஜெகதீஸ்வரன், ஆ.இராஜாராமன், எல்.சின்னையா பெ.இராஜேந்திரன், ரெ.குமரவேல், எஸ்.பிரகாஷ், ஆ.பாண்டிக்குமார், மு.ஆன்டி ராஜ், வி.சி.வில்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு மாதமும் போல நிகழ்ச்சி மாலை 6 மணிக்குத் தொடங்கி, 07.30 மணிக்கு நிறைவு பெற்றது.
திருவெறும்பூரில் ‘பெரியார் பேசுகிறார்’ 7ஆவது நிகழ்ச்சி
Leave a Comment