தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தி.மு.க. முன்னோடி இராஜாராம் இல்லத்திற்குச் சென்று அவருக்குப் பயனாடை அணிவித்து உடல் நலம் விசாரித்தார். உடன்: மாரியப்பன் கருணாநிதி, வீகேயென் ராஜா, வீகேயென் பாண்டியன் உள்ளனர்.
பேராசிரியர்கள் ஆ.திருநீலகண்டன் – சோ.பாண்டிமாதேவி – மருத்துவர் மதி ஆகியோரின் புதிய இல்லத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேரில் சென்றார். அவரது குடும்பத்தார் ரூ.5000-த்தினை பெரியார் உலகத்துக்கு நன்கொடையாக வழங்கினர். உடன்: பூவுலகு மின்மினி இதழின் ஆசிரியர் ராஜாராம் உள்ளார்.