சென்னை, ஏப். 30- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் மே மாதத்துடன் ஓய்வு பெறுகின்றனர் இதனால் நீதிபதிகள் எண்ணிக்கை 60ஆக குறைகிறது.
சென்னை உயர்மன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 75 ஆகும். தற்போது 65 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 10 நீதிபதிகள் பணியிடம் காலி உள்ளது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மே மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது கோடைகால சிறப்பு அமர்வுகள் மட்டும் செயல்படும். அடுத்த ஓரு மாதத்தில் அய்ந்து நீதிபதிகள் ஓய்வு பெறுகின்றனர். நீதிபதி
ஆர்.ஹேமலதா இன்றும், மூத்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் மே 2ஆம் தேதியும், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் மே 9ஆம் தேதியும், நீதிபதி வி.பவானி சுப்பராயன் மே 16ஆம் தேதியும் நீதிபதி வி.சிவஞானம் மே 31ஆம் தேதியும் பணி ஓய்வு பெறுகிறார்.
இதனால், நீதிபதிகள் எண்ணிக்கை 60ஆக குறையும். 15 நீதிபதிகள் பணியிடம் காலியாக இருக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 5 நீதிபதிகள் ஓய்வு பெறவுள்ளனர். இந்த மாதம் ஓய்வு பெறும் அய்ந்து நீதிபதிகளுக்கும் உயர் நீதிமன்றம் சார்பில் பிரிவு உபசார நிகழ்ச்சி இன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.