சிவகங்கை, ஏப். 29- சிவகங்கை கழக மாவட்டம், திருப்பத்தூர் சத்யா மகாலில் 14.04.2025 அன்று மாலை 5.00 மணியளவில் பகுத்தறிவாளர் கழகம் மற்றும் தமுஎகச இணைந்து நடத்திய அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் வைகை பிரபா தலைமையில் கொண் டாடப்பட்டது.
மாவட்ட கழக துணைச் செயலாளர் ஆ. தங்கராசன், தமிழ் வழிக்கல்வி இயக்கப் பொறுப்பாளர் த்தினம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பகுத்தறி வாளர் கழக மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜ் வரவேற்புரை ஆற்றினார்.
பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் வைகை பிரபா தலைமையுரையாற்றி மாணவர் களுக்குப் புத்தகம் பரிசளித்துப் பாராட்டினார்.
வான்மதி முத்துக்குமார், பிரம்மன் கமலக்கண்ணன், கணேசன், சாகுல்ஹமீது, பாடகர் செங்குட்டுவன், கவிஞர் குத்புதீன், திலகவதி மற்றும் மாணவர்கள் மற்றும் பெரியார் பிஞ்சுகள் வருகை தந்து சிறப்பித்தனர்.
கலந்து கொண்ட தோழர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து உரை யாடினர். நிறைவாக திரைக்கலைஞர் மம்முட்டி நடித்த அம்பேத்கர் திரைப்படம் திரையிடப்பட்டது. பொறியாளர் சுபா நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.