சென்னை, ஏப்.30 அண்ணா அறிவாலயத்தில் மயிலை சட்டப்பேரவை உறுப்பினர் த.வேலு இல்ல மணவிழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். அதுதான் எனது வேண்டுகோள் என தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், ‘‘குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்கள் வைக்க நினைத்தாலும், குழந்தைகளுக்கான பெயர்கள் மற்றும் அதற்கான பொருளை தெரிந்துகொள்ள சரியான சமூக வலைத்தளங்கள் தமிழ்நாட்டில் இல்லை. எனவே, இதற்காக தமிழ் வளர்ச்சித்துறை அல்லது தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் வலைத்தளம் உரு வாக்கினால் சிறப்பாக இருக்கும் தலைவரே!’’ என்று நிதின் சிற்றரசு என்பவர் ‘எக்ஸ்’ தளத்தில் கேட்டு இருந்தார்.
இந்த நிலையில், தம்பி நிதின் சிற்றரசு வின் கோரிக்கை நிறைவேற்றப்படும். குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் – அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.