ஒரு மனிதன் எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும், எவ்வளவு பெரிய பதவி, அதிகாரம் உள்ளவனாக இருந்தாலும், எவ்வளவு பெரிய படிப்பு எம்.ஏ.,பி.ஏ, டாக்டர் படிப்புப் படித்திருந்தாலும் அவன் கோயிலுக்குப் போகிறான் என்றால் அவன் தன்னைச் சூத்திரன் என்பதாக ஒப்புக் கொண்டுதானே போகின்றான். அப்படி அவன் தான் சூத்திரன் என்பதை ஒப்புக் கொள்வதால்தானே அவன் கோயிலுக்குப் போய் வெளியே நிற்கின்றான். அப்படி இல்லையென்றால் பார்ப்பான் இருக்கிற இடம் வரைக்கும் செல்லலாமே! நம்மைவிட இழிவான பார்ப்பான் சிலைக்குப் பக்கத்திலிருந்து கொண்டு நம்மைப் பார்த்து “நீ சூத்திரன் – வெளியே நில்!” என்கிறான். இப்படி ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்துவதற்காகவா கோயில் இருக்க வேண்டும்? கடவுள் இருக்க வேண்டும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’