நாளை (1.5.2025) மே முதல் நாள்; தொழிலாளிகள் உரிமைகளை வென்றெடுத்த நாள்!
‘‘காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் – அவன்
காணத் தகுந்தது வறுமையாம்
பூணத் தகுந்தது பொறுமையாம்!’’
என்று கேட்டார் புரட்சிக்கவிஞர்.
தந்தை பெரியாரும், ம.சிங்காரவேலரும் சிறப்பாக இணைந்து பல ஆண்டு களுக்குமுன்பே மே தினம் போன்ற தொழிலாளர் திருவிழாவை – தெரு விழாக்களாக ஆக்கினார்கள்.
இன்று மேதினியெங்கும் மே நாள் விழா!
‘திராவிட மாடல்’ ஆட்சியே, தொழி லாளர்களுக்கான ஆட்சிதான்!
இந்நாளில், ‘‘தொழிலாளி என்றும் தொழிலாளியாகவே தொடராமல், முதலீட்டின் பங்காளியாக (உரிமையாளர்) மாற்றிய புதுமையைக் கண்டாகவேண்டும்’’ என்ற தந்தை பெரியாரின் விழைவு – முற்றான நடைமுறையாகி, அகிலத்தை ஆளவேண்டும்.
அனைவருக்கும் நமது மேதின வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.4.2025