சென்னை, ஏப்.29 தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் த.அமிர்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
முதலமைச்சர் தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை 53 சதவீதத் தில் இருந்து 55 சதவீதமாக அதாவது 2 சதவீதம் உயர்த்தியதோடு, இந்த உயர்வினை ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து உயர்த்தி வழங்க உத்தரவிட்டதற்காக நூற்றாண்டு பாரம்பரியமிக்க தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
எங்கள் கோரிக்கையை உடனே நிறைவேற்றி தந்த தோடு, 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதிய தாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பலன் அடையும் விதமாக நிலுவையின்றி ஜனவரி மாதத்தில் இருந்து வழங்குவதாக அறிவித்துள்ளது மிக்க மகிழ்ச்சி
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றியம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவ தாக சட்டமன்றத்தில் விதி எண் 110-இன் கீழ் அறிவித்துள்ளது மகிழ்வை தருகிறது. ஈட்டிய விடுப்பிற்கான பணப்பலன் பெறுவதை 1-4-2026 முதல் வழங்கப்படும் என்பதை முன்தேதியிட்டு 1-10-2025 முதல் வழங்குவதாக அறிவிப்பு என 9 முத்தான அறிவிப்புகளை செய்ததற்காக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த அறிவிப்புகளை செய்து எங்களை மகிழ்வித்தது போல பங்களிப்பு ஓய்வூதிய திட்டத் தினை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்துதல், காலி பணியி டங்களை நிரப்புதல் உள்ளிட்ட எங்களது நிலுவை கோரிக்கைகளையும் முதலமைச்சர் அறிவிப்பார் என நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது