சென்னை, ஏப்.29- கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக் கப்படுவதற்கான சட்ட மசோதாவை சட்டப் பேரவையில் அமைச்சர் கோவி. செழியன் தாக்கல் செய்தார்.
கலைஞர் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு சட்டப்பேரவை அவை விதி 55-இன் கீழ் முன்வரிசைத் தலைவர்கள் கடந்த 24-ஆம் தேதியன்று உரையாற்றி, கலைஞர் பெயரில் பல் கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதை ஏற்றுக்கொண்டு, கும்பகோ ணத்தில் ‘கலைஞர் பல்கலைக்கழகம்’ என்ற புதிய பல்கலைக்கழகம் அமைக் கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சட்ட மசோதா தாக்கல்
அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் சட்டப் பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று (28.4.2025) கலைஞர் பல்கலைக்கழக சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பாரதிதாசன் பல்கலைக்கழகம் அரியலூர், கரூர், நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை. தஞ்சை, திருச்சி, திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய மற்றும் பெரும்பகுதிகளை கொண்டதாக உள்ளது. டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதி களில் உள்ள மாணவர்களின் தேவை களை நிறைவு செய்வதில் முக்கியப் பங்காற்ற இந்தப் பல்கலைக்கழகம் கட்டப்படுகிறது.
4 மாவட்டங்கள்
இந்த சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரிடையே அதிகரித்து வரும் உயர்கல்வித் தேவையை நிறைவேற் றவும், டெல்டா பகுதியைச் சேர்ந்த பின்தங்கிய பின்னணியில் இருந்து வரும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறை வேற்றவும், உயர்கல்வி நிறுவனங்களில் அவர்கள் சேருவதற்கும், மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும், அரியலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படுகிறது.
அந்த வகையில் கலைஞர் பல்கலைக்கழகத்தின் தலைமையகம், கும்பகோணம் எல்லையிலோ அல்லது அந்த எல்லையின் 25 கி.மீ. சுற்றளவிற்குள் ஏதாவது ஒரு இடத்திலோ உருவாக்குவதற்கான சட்டமசோதா அறிமுகம் செய்யப்படுகிறது. பட் டங்கள், சிறப்புப்பட்டங்கள், பட்டயங்களை வழங்கும். ஆராய்ச்சி மற்றும் அறிவு மேம்பாட்டுக்காக இந்த பல்கலைக்கழகம் செயல்படும். இந்த பல்கலைக்கழகத்துக்கான பரப்பிடத்திற்குள் தங்கி இருப்பவர், அஞ்சல் வழிக் கல்வி மூலமாக படித்து பட்டம் பெறலாம்.
முதலமைச்சரே வேந்தர்
இந்தப் பல்கலைக்கழகத்தை வேந்தர், இணை வேந்தர், துணை வேந்தர், பதிவாளர், புலத்தலைவர், நிதி அலுவலர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் நிர்வகிப் பார்கள். பல்கலைக் கழகத்தின் வேந்தராக தமிழ்நாட்டின் முதலமைச்சர் இருப்பார்.
அந்தப் பதவி மூலம் பல்கலைக் கழகத்தின் தலைவராக இருப்பதுடன், பட்ட மளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கி மாணவர் களுக்கு பட்டம் வழங்குவார். பல்கலைக் கழகத்தின் அதிகார அமைப்புகளுக்கு வேறு நபர்களை வேந்தர் நியமிக்கலாம்.
உயர்கல்வித்துறை அமைச்சர் இணை வேந்தராக செயல்படுவார். வேந்தர் இல்லாத அல்லது இயலாத நிலையில் அவரது அனைத்து அதிகாரங்களையும் இணை வேந்தர் செயல்படுத்துவார். குழு நியமிக்கப் பட்டு, அதன் மூலம் 3 பெயர் தேர்வு செய்யப்பட்டு, அதில் ஒருவரை துணை வேந்தராக வேந்தர் நியமிப்பார்.
நீக்கம்
உச்சநீதிமன்றம் அல்லது நீதிமன்றத் தின் ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது அரசின் முதன்மைச் செயலாளர் பதவிக்கு குறையாதவர் அல்லது அதில் இருந்து ஓய்வுபெற்றவர் அல்லது சிறந்த கல்வியாளர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம். துணைவேந்தர் 3 ஆண்டுகள் பதவி வகிக்கலாம். மேலும் 3 ஆண்டுகளுக்கு அவர் மறு நியமனம் செய்யப்படலாம்.
துணை வேந்தரை பணி நீக்கம் செய்வதற்கு அரசாணை பிறப்பிக் கப்பட வேண்டும். அவர் மீது விசா ரணையை நீதிமன்றத்தின் நீதிபதி அல்லது தலைமைச்செயலாளர் மேற்கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும். வேந்தர் மற்றும் இணை வேந்தர் வருகை தராவிட்டால் பல் கலைக்கழக பட்டமளிப்பு விழாவை துணை வேந்தர் நடத்துவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.