டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*சமூகத்தில் பிளவை ஏற்படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ். – பாஜக, சித்தராமையா குற்றச்சாட்டு.
* தெலங்கானா நீதித்துறையில் சேர தெலுங்கு கட்டாயம் என்ற அரசின் ஆணை செல்லும், உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
* குற்றம் சாட்டப்பட்ட தமிழ்நாடு அமைச்சர்கள் பதவி விலகியது ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்கும் செயலாகும் என தலையங்கத்தில் பாராட்டு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அரசியல் சவால்கள் அதிகரித்தாலும், திராவிட மாடல் அரசு, அரசு ஊழியர்களின் நலனின் உறுதியான பாதுகாவலராக என்றும் துணை நிற்கும் என சட்டமன்றத்தில் விதி 110 இன் கீழ் பல்வேறு சலுகைகளை அரசு ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத் தைப் பிரித்து கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் நிறுவப்படும். இந்தப் பல்கலைக்கழகம் எட்டு மாவட்டங்களை உள்ளடக்கியது. குறிப்பிடத்தக்க வகையில், முதலமைச்சர் புதிய பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருப்பார். இதற்கான மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்.
– குடந்தை கருணா