முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.4.2025) பாரதிதாசன் அவர்களின் 135 ஆவது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பாரதிதாசன் அவர்களின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மருத்துவம் மற்றும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர்கள்த வேலு, எஸ்.அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி. பிரபாகரராஜா, துணை மேயர் மு. மகேஷ் குமார், கவிஞர் வா.மு. சேதுராமன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்ப்புத் துறை இயக்குநர்
மரு. இரா. வைத்திநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந. அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.