சென்னை, ஏப்.28- சூரிய ஒளி ஆற்றல் பயன் பாட்டை அதிகரிக்க ரூ.20 கோடி செலவில் பசுமை பள்ளிகள் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித் துள்ளார்.
உயிர்க் கேடயங்கள்
சட்டப் பேரவையில் நிதித்துறை மற்றும் சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மானிய கோரிக்கையின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய அறிவிப் புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
மதுராந்தகம், அரக்கோணம், குளித் தலை, சீர்காழி, சாத்தூர் மற்றும் திருச்செந்தூர் ஆகிய 6 இடங்களில் புதிய சார் கருவூல அலுவலகக் கட்டடங்கள் கட்டப் படும்.
கடல்மட்ட உயர்வு மற்றும் கடல் அரிப்பை தடுக்க கடலோர மாவட்டங்களான கடலூர் மற்றும் தூத்துக்குடியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் உயிர்க் கேடயங்கள் உருவாக்கப்படும். அதன்மூலம் நாட்டு மரங்கள், அலையாத்தி மரங்கள் போன்றவை நடவு செய்யப்படும்.
சூரிய ஒளி ஆற்றல்
தமிழ்நாடு அரசு, கைவிடப்பட்ட சுரங்கங்கள், குறிப்பாக மதுக்கரையில் உள்ள சுரங்கங்களை நிலையான, உற்பத்தித் திறன் மற்றும் உயிர் மேம்பாட்டிற்கு உகந்த வகையிலான நிலப்பரப்பாக மாற்றும் வண்ணம் இந்த சூழல் அமைப்புகளை மீட்டெடுக்க திட்டமிட்டு உள்ளது.
பசுமைப் பள்ளிகள்
பசுமைப் பள்ளிகள் திட்டத்தின் வாயிலாக, பள்ளிகளில் சூரிய ஒளி ஆற்றல் பயன்பாடு மூலம் மின் விளக்குகள், பம்புகள், ஆழ்துளைக் கிணறுகள், மழை நீர் சேகரிப்பு அமைப்புகள், உர உற்பத்தி, காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டங்கள் மற்றும் பழ மரங்கள் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் மேற் கொள்ளப்பட்டு, பிளாஸ்டிக் இல்லா சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் 100 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
கடலில் கைவிடப்படும் மீன்வலைகளை மீனவர் களின் பங்கேற்புடன் சேகரித்து அவை மறு சுழற்சி செய்யப்படு கின்றன.
இதுவரை, மீனவர் களிடம் இருந்து 13,510 கிலோ மீன்வலை கழிவுகள் சேகரிக்கப் பட்டு, பயனுள்ள பொருட்களாக மாற்றப்பட்டு உள்ளன. இந்த திட்டம் மாநிலத்தின் அனைத்து 14 கடலோர மாவட்டங்களிலும் ரூ.1.75 கோடியில் செயல்படுத்தப்படும்.
பறக்கும் படைகள்
கடலுக்கு செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளை தடுக்கும் வகையில், சென்னை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய முக்கிய கடலோர மாவட்டங்களில் ரூ.1 கோடி மதிப்பில் வள மீட்பு மய்யங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னை மண்ட லத்தில் நிகழ்நேரத்தில் காற்று, நீர் மற்றும் ஒலியின் தரத்தைத் தொடர்ந்து கண்காணிக்க, நவீன பகுப் பாய்வு கருவிகளுடன் ஒரு நடமாடும் கண் காணிப்பு வாகனத்தைப் பயன்படுத்தும் முன்முயற்சி ரூ.1 கோடி செலவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் மேற் கொள்ளப்படும்.
வாகன உமிழ்வைத் கண்காணிக்கும் முறை
சாலைவழி வாகனங் களின் உமிழ்வு வெளி யீட்டைதொலைவில் இருந்து கண்காணிக் கும் விதமாக தேர்ந் தெடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் முன்னோட்ட அடிப் படையில் வாகன உமிழ்வைத் தொலைவில் இருந்து கண்காணிக்கும் முறையை ரூ.15 லட்சம் செலவில் செயல் படுத்தப்பட உள்ளது.
மதுரை, திருச்சி, கடலூர், கோவை மற்றும் நெல்லை ஆகிய 5 இடங்களில் ரூ.2.35 கோடி செலவில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய பறக்கும் படைகள் நிறுவப்படும். இவ்வாறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.