திருப்பராய்த்துறை, ஏப்.27- திருப்பராய்த்துறையில் உள்ள சிறீராமகிருஷ்ண குடில் 1949ஆம் ஆண்டு துவங்கி கடந்த 75 ஆண்டுகளுக்கு மேல் ஆதரவற்ற சிறார்களின் கல்வி மேம்பாட்டிற்காக அரிய சேவை செய்து வருகிறது.
இங்கு தாயோ, தந்தையோ அல்லது யாராவது ஒருவர் இல்லாத குழந்தைகள் சேர்த்துக் கொள்ளபடுகிறார்கள். இந்த ஆஸ்ரமத்தில் ஓர் துவக்கப்பள்ளியும். உயர்நிலைப்பள்ளியும் உள்ளன. ஆசிரியர்கள் தங்க குடியிருப்புகள் உள்ளன. இதனால் இரவும் பகலும் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டில் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.
பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் அரசு
அய்.டி.அய்.ல் சேர்த்து தொழிற்பயிற்சி அளிக்கப் படுகிறது. வேலை இவர்களின் வாய்ப்பிற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இங்கு சேர்க்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் உணவு, உடை, மருத்துவம் மற்றும் இருப்பிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இங்கு கல்வி பயிலும் சிறார்களுக்கு காந்திய வழி கல்வி மூலம் அவரவர் பணிகளை அவர்களே செய்து கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் 10ஆம் வகுப்பில் 400 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை சென்னை மயிலாப்பூர் சிறீ ராமகிருஷ்ண மிஷன் கல்லூரியில் பாலிடெக்னிக் படிப்பில் சேர்த்து பொறியாளர்களாகவும் ஆக்கப்படுகின்றனர். இங்குள்ள மாணவர்களை வாரம் ஒருமுறை ஜி.வி.என். டாக்டர் பார்வையிடுகிறார். தேவைப்படுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரை அளித்து அவர்கள் உடல் நலன் காக்கப்படுகிறது. மாணவர்கள் ஓவியம். நாடகம், யோகா, கணினி பயிற்சி ஆகிய கலைகளில் திறமை வெளிப்பட வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
“திக்கற்ற மாணவர்களை 1ஆம் வகுப்பு முதல் 6-ஆம் வகுப்பு வரை சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.” குழந்தையாக சேரும் மாணவர்கள் திறன் மிக்க குடிமக்களாக வெளியேறுகின்றனர். இவை அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இங்கு சுமார் 200 மாணவர்களுக்கு மேல் கல்வி பயின்று வருகிறார்கள். ஆதலால் கல்வி தேவைப்படும் ஆதரவற்ற சிறார்களின் பாதுகாவலர்கள் கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
சிறீ ராமகிருஷ்ண குடில், திருப்பராய்த்துறை, திருச்சி மாவட்டம்-639115, தமிழ்நாடு.
தொலைபேசி எண்: 0431-2614235 அலைபேசி: 8300133766, 6383716578.