நேற்று (26.4.2025) சென்னை, அண்ணா நிருவாக பணியாளர் கல்லூரியில் நடைபெற்ற “நான் முதல்வன்” திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மய்யத்தில் பயிற்சி பெற்று இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுடன் குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற வெற்றியாளர்கள் குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வின்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், அண்ணா நிருவாக பணியாளர் கல்லூரியின் கூடுதல் தலைமைச் செயலாளர் / பயிற்சித் துறை தலைவர் விக்ரம் கபூர், மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் கோ. பிரகாஷ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கிராந்தி குமார் பாடி, நான் முதல்வன் போட்டி தேர்வு சிறப்பு திட்ட இயக்குநர் சி. சுதாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.