மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் நேற்று (25.04.2025) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், அரசுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி அஸ்வினி ரோபோடிக் மூலம் அறுவை சிகிச்சை செய்து குணமடைந்தவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, சிகிச்சை அளித்த மருத்துவக்குழுவினரை பாராட்டினார். இந்நிகழ்வில் மயக்கவியல் துறை பேராசிரியர் மரு.குமார், இதயவியல் துறை பேராசிரியர் மரு.மீனாட்சி சுந்தரம், நோடல் அலுவலர் மரு.ஆனந்தகுமார் மற்றும் மருத்துவக் குழுவினர் உடனிருந்தனர்.