திராவிடர் கழகத்தின் அரியாங்குப்பம் கொம்யூன் தலைவர் இரிச்சாம்பாளையம் செ. இளங்கோவன் அவர்களது இல்லம் சென்று திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் மற்றும் விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன் ஆகியோர் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.
புதுச்சேரி தன்னுரிமைக் கழகத் தலைவர் அரியாங்குப்பம் தூ. சடகோபன் அண்மையில் உடல்நலம் குன்றி இருந்தார். அவரை நேரில் சந்தித்து திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் ஆறுதல் கூறினார். மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் வே.அன்பரசன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன் , செயலாளர் ஆ.சிவராசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
உடல் நலம் விசாரிப்பு
Leave a Comment