பழனி, ஏப்.25 பழனி மாவட்ட இளைஞரணி சார்பில் அண்ணல் அம்பேத்கரின் 135 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பாசிச சதியை முறியடிப்போம் என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம்பழனி தந்தை பெரியார் சிலை அருகில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்குப் ப.பாலன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) தலைமையேற்றார், சி.கருப்புச்சாமி (மாவட்ட இளைஞரனி தலைவர்) வரவேற்புரையாற்றினார்.
பழனி மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார், மாவட்டத் தலைவர் மா.முருகன், ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மேலும் இந்நிகழ்வில் பெ.இரணியன், வெற்றிவேந்தன், சி.இராதாகிருட்டிணன்,ச.திரா விடச்செல்வன், குண.அறிவழகன், தேவத்தூர் மதிவாணன், செல்லம்மாள், வீரக்குமார், அருண், உள்ளிட்ட கழகத்தோழர்கள் மற்றும் இரணியன், அருந்தமிழன், மாரிமுத்து, சுப்பிரமணி, அ.தமிழ்முத்து, கா.பாண்டி,பழனி மணி, பழனி ராஜா, திருமாமணி, மருதமூர்த்தி,கார்கி, சங்கர்,சித்தன் உள்ளிட்ட தோழர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர், கூட்ட தொடக்கத்தில் சு.அழகர்சாமி வழங்கிய மந்திரமா?தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக இளைஞரணி செயலாளர் பா.குமார் நன்றி கூறினார்.